50-வது படத்தில் ‘இளவரசி’ பட்டம் வாங்கிய ஹன்சிகா

Get real time updates directly on you device, subscribe now.

‘குலேபகாவலி’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவின் ‘100’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் ஹன்சிகா வெற்றிகரமான தனது 50-வது படத்தை எட்டியிருக்கிறார்.

‘ரோமியோ ஜூலியட்’, ’போகன்’ ஆகிய படங்களில் இயக்குனர் லக்‌ஷ்மனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இயக்கும் இப்படத்துக்கு மஹா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கிரைம், த்ரில்லர் ஜானராக தயாராகப் போகும் இப்படத்தை ‘Etcetera எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Related Posts
1 of 7

”இந்தப் படத்தின் கதை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் கதை. அதனால் இதற்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறாராம் தயாரிப்பாளர் மதியழகன்.

மேலும் இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா தமிழ்சினிமாவில் ஒரு இளவரசியாக வலம் வருவார் என்று நம்புகிறேன். அதனால் இந்த திரைப்படம் மூலம் அவருக்கு ‘இளவரசி’ என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக்குழு பெருமையடைகிறது” என்கிறார்.