’தாராவி’ தொடரின் வெற்றிக்கு காரணம் யார் !

Get real time updates directly on you device, subscribe now.

கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வகையில் நடிகர்களின் வலுவான நடிப்பு ஒரு படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். அந்த வகையில், எம்.எக்ஸ் ஒரிஜினல் கதையான ’தாராவி பேங்க்’ இணையத்தொடரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வது அதிலுள்ள நடிகர்களின் நடிப்புதான்.

மொத்தம் 10 எபிசோட்களைக் கொண்ட இந்த இணையத் தொடர், அமைதியற்ற காவல்துறை அதிகாரியான விவேக் ஆனந்த் ஓபராய் மற்றும் தமிழனாக டான் தலைவன் கதாபாத்திரத்தில் சுனில் ஷெட்டியும் நடித்துள்ளனர். டானாக இருந்தாலும் தலைவனின் இன்னொரு பக்கமான அவனது குடும்பத்தின் மீதான அன்பும் இதில் காட்டப்பட்டுள்ளது. தலைவனின் குடும்பமாக சாந்தி பிரியா, பாவனா ராவ் மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகர்களைக் கதைக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நடிகர்கள் தேர்வு குறித்து இயக்குநர் சமித் கக்கட் பேசும்போது,

“இந்தத் தொடரை உருவாக்கும்போது ஒவ்வொரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதை கோரியது. அந்த வகையில், ‘தாராவி பேங்க்’ தொடரின் வெற்றிக்குக் காரணமாக நடிகர்களின் தேர்வும் முக்கியம் எனக் கருதுகிறேன். அன்னா, ஹெய்ல் என தெற்கில் இருந்து கிடைத்த நடிகர்கள் எல்லாருமே தங்களது கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களது திறமையான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் சரியான வசன உச்சரிப்பு, மொழி, கலாச்சாரம் என தெற்கின் அத்தனை விஷயங்களையும் சரியாக வெளிப்படுத்தினார்கள். இதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்”.

#DharaviBank