அஜித்தின் 60-வது படம் – அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்
சிவா டைரக்ஷனில் அஜித் நடித்திருக்கும் ’விஸ்வாசம்’ திரைப்படம் வருகிற 2019 ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது.
இன்னும் டீசர், ட்ரெய்லர், ஆடியோ என எதுவும் வெளியாகததால் வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு நேற்று அஜித்தின் 60-வது படம் பற்றி வந்த செய்தி சந்தோஷத்தைக் கொடுத்தது.
ஆனால் அந்தச் செய்தி ஒரு வதந்தி என்று தெரிய வந்திருக்கிறது.
அதாவது அஜித்தின் 60வது படத்தையும் டைரக்டர் சிவாவே இயக்கப் போவதாகவும், அதனை காற்றின் மொழி படத்தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாாிக்க போவதாகவும் செய்தி ஒன்று வெளியானது.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்தச் செய்தி வதந்தி, அஜித்தை வைத்து நான் எந்தப்படமும் தயாரிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.