ஹனு-மான் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் !

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும். அதன் தொடர்ச்சியாக,  அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும். 

முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக  சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் இவற்றை வெளியிட்டுள்ளார். 

Related Posts
1 of 5

பிரமாண்ட திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை மிகவும் அருமையாக அமைந்துள்ள முதல் பார்வை போஸ்டர் மற்றும் காணொலி அதிகரிக்கின்றன. தேஜா சஜ்ஜா அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு தனது இலக்கை ஒரு உண்டிகோல் மூலம் குறி பார்ப்பதை காணலாம். சூப்பர் ஹீரோவாக நடிப்பதற்காக கடும் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். 

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகளும், காலணியும் கவனத்தை ஈர்க்கின்றன. ஒலி வடிவமைப்பும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன. அஞ்சனாத்ரிக்கு செல்லும் ஆர்வத்தை முதல் பார்வை போஸ்டர் மற்றும் காணொலி தூண்டுகின்றன.