ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி”!

Get real time updates directly on you device, subscribe now.

அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில், டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த உளவியல் திரில்லராக உருவாகியுள்ள படம் “ஐடென்டிட்டி”.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, ஜனவரி 31, 2025 அன்று ZEE5 ஒரிஜினல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தினை, ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தினை, தொலைநோக்கு படைப்பாளிகளான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ளனர். பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, ஜனவரி 31 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இந்த பிளாக்பஸ்டர் படத்தினை தவற விடாதீர்கள்.

பழிவாங்கும் கதைப்பின்னணியில், நீதியின் அவசியத்தைச் சொல்லும் இப்படம், ஆரம்பம் முதலே நம்மை ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் சவாரிக்கு அழைத்துச் செல்கிறது. இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கியுள்ள, இந்த உளவியல் த்ரில்லர், ஒரு பிளாக்மெயிலரான அமர் பெலிக்ஸின் கொலையின் மோசமான மர்மத்தை அவிழ்க்கிறது -. அந்தக்கொலையை நேரில் பார்த்த, முகங்களை அடையாளம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்ட அலிஷாவை, சிஐ ஆலன் ஜேக்கப் விசாரிக்கிறார். அந்த விசாரணை கராத்தே பயிற்றுவிப்பாளரான ஹரன் சங்கரிடம் செல்கிறது. ஆனால் கதை அங்கு முடிவதில்லை. ஹரனும் அலிஷாவும் கொலையின் பின்னணி குறித்த, அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த உண்மைகள் ஒரு பெரிய குற்ற நெட்வொர்க்கை வெளிக்கொண்டு வருகிறது.