ராம்பொத்தினேனி சிம்பு திடீர் சந்திப்பு!
ராம் பொத்தினேனியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படமான ‘ தி வாரியர்” திரைப்படம் ஜூலை 14, 2022 அன்று வெளியாக உள்ளது. இது நடிகர் ராமின் முதல் தமிழ் படம். எனவே, தற்போது இந்த படத்தை தமிழில் விளம்பரப்படுத்தும் பணியில் அவர் பிஸியாக உள்ளார்.சரளமாக தமிழ் பேசும் ராம், தமிழ் ஊடகங்களுடன் உரையாடி விரிவான பேட்டிகளை கொடுத்து வருகிறார். இன்று புரமோஷன் நிகழ்ச்சியின் போது, ராம் பொதினேனி தனது அன்பு நண்பரான நடிகர் சிலம்பரசன் அவர்களை சந்தித்தார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரத்தை பகிர்ந்துகொண்டனர். அந்த புகைப்படம் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராம் பொத்தினேனி தனது ஸ்டைலான தோற்றத்தால் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறார், அதே நேரத்தில் சிம்பு தனது முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் நீண்ட தாடியால் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
ராம் பொத்தினேனியின் அன்பு நண்பர் சிம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதன் காரணமாகவே, ராம் பொத்தினேனி ‘ தி வாரியர்’ படத்திற்காக சிம்புவிடம் ஒரு பாடலைப் பாடும்படி கேட்டுக் கொண்டபோது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு சார்ட்பஸ்டர் புல்லட் பாடலைப் பாடினார், இப்பாடல் பல சாதனைகளை முறியடித்து, இன்னும் யூடியூப்பில் பிரபலமாக உள்ளது.