இது நம்ம ஆளு – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

idhu

Rating : 1.8/5

ரும்… ஆனா வராது…

ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கும் போதும் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் சிம்பு ரசிகர்களுக்கே இப்படிப்பட்ட டவுட்டைத் தான் கிளப்பும்.

அந்தளவுக்கு எல்லாப் பிரச்சனைகளும் எங்களால் மட்டுமே என்று டி.ஆரும், அவரது புதல்வர் சிம்புவும் முதல் ஆளாக கைகளை உயர்த்தி புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.

வலுவில்லாத கதை, மனம் போன போக்கில் செல்லும் சுவாரஷ்யமில்லாத திரைக்கதை என புரிந்து கொள்ள முடியாமல் போவதே ரசிகனுக்கு சாபம் தான். நல்லவேளையாக சூரி இருந்தார். அவர் மட்டும் இல்லையென்றால் கொடுத்த காசுக்கு வர வேண்டிய கொஞ்ச நஞ்ச சுவாரஷ்யமும் சேட்டு கேடையில் அடகு போயிருக்கும்.

கிளைமாக்ஸில் ‘அப்பாடா… ஒரு வழியா உங்க ரெண்டு பேரையும் வெச்சு இந்தப் படத்தை முடிச்சிட்டேன்’ என்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். அந்த அலுப்பு படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரசிகர்களுக்கு வந்து விடுகிறது!

சரி கதைக்கு வருவோம்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சிம்பு அதே பீல்டில் இருக்கும் ஆண்ட்ரியாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த காவியக் காதல் புட்டுக் கொள்ளவும் சமத்துப் பிள்ளையாக நயன்தாராவை பெண் பார்க்க கிளம்புகிறார்.

போன இடத்தில் சிம்புவின் முன்னாள் காதலியான ஆண்ட்ரியாவுடனான காதலைப்பற்றி நயன் கேட்க சிம்புவுக்கோ அதிர்ச்சி. ஆண்ட்ரிவுடனான காதல் ஏன் புட்டுக்கிச்சு என்று விளக்கமெல்லாம் கொடுத்து நயனிடம் மனசை பறிகொடுக்கிறார்.

இந்தக் காதலும் திருமணத்தில் முடியும் முன்பாகவே சம்பந்திகளுக்குள் குடிகார சண்டை வர அதனாலேயே சிம்பு – நயன் தாரா பிரிய நேர்கிறது.

பிரிந்த ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்……….

விரல் வித்தை, பஞ்ச் டயலாக், குலை நடுங்க வைக்கிற ஐட்டம் டான்ஸ் என எந்த எரிச்சலும் தராத வரைக்கும் சிம்புவை பாராட்டலாம். ஆனால் படம் முழுக்க நயனுடனுன் போனில் பேசிக்கொண்டே இருக்கும் திராபையைத் தான் மன்னிக்கவே முடியாது.

அதாவது பரவாயில்லை. ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு கெட்டப்பில் தெரிகிறார். இஷ்டத்துக்கு படப்பிடிப்புக்கு வருவார் போலிருக்கிறது. சில காட்சிகளில் அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வசனங்களாக்கி பேசச் சொல்லியிருக்கிறார்கள். ( இவிங்க நிஜ வாழ்க்கையில அடிச்ச கூத்தையெல்லாம் காசு கொடுத்து பார்க்கணும்னு ரசிகனுக்கு என்ன தலைவிதியா?)

காலையில ஏழு மணிக்கு வர வேண்டிய சிம்பு இருட்டுனதுக்கு அப்புறம் சாயங்காலம் 7 மணிக்கு வந்து நின்னார்னா பாவம் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மும் என்னதான் பண்ணுவார்? நயன்தாரா, ஆண்ட்ரியா, சிம்பு மூவருக்கும் தனித்தனியாக க்ளோசப் ஷாட்டுகளை வைத்து டயலாக் பேசச்சொல்லி நிரப்பியிருக்கிறார். பட் தனது வழக்கமான கலர்புல் ஒளிப்பதிவில் எந்தக்குறையும் வைக்கவில்லை.

படத்தில் சூரியைப் போல இருக்கும் இன்னொரு ஆறுதல் நயன்தாராவின் நடிப்பு. சிம்புவின் காதலுக்காக உருகும் காட்சிகளில் மனசைத் தொடுகிறார்.

ஆண்ட்ரியா ஆண்ட்டி மாதிரி தெரிகிறார். புன்னகையில் மட்டும் கவர்கிறார்.

நீங்க இவ்வளவு நேர்மையான ஆளா? என்னை நீங்க நல்லா ‘வெச்சிப்பீங்க’

Related Posts
1 of 11

யா யா

இல்ல ‘வெச்சிப்பீங்க’ன்னு சொன்னீங்கள்ல…

……..

எங்க இருக்க…

‘சம்பந்தி’ கூட இருக்கேன்.

‘சம்பந்தி’ கூடயா?

என்னப்பா ‘சமந்தா’ கூட இருந்தா தானே நீ ஆச்சரியப்படணும்?

……..

இப்படிப்பட்ட கருத்துச் செறிவான வசனங்கள் எல்லாம் படத்தில் உண்டு.

ஜெய்யும், சந்தானமும் தங்கள் பங்குக்கும் கஷ்டப்பட்டு வந்து போகிறார்கள்.

பாண்டிராஜ் படங்களில் ஜெயப்பிரகாஷ் நடிப்பார். இதில் இருக்கிறார். அவரை வைத்து காமெடி டயலாக் பேசச் சொல்வதெல்லாம் எந்த ஹிட் லிஸ்ட்டில் சேர்த்தியோ..?

இசையமைப்பாளராக அறிமுகம் சிம்புவின் தம்பி குறளரசன். தம்பி நீங்க எதாவது கல்யாணத்துல பேண்ட் வாசிக்க போனீங்கன்னா நாலு காசாவது தேறும்!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.

எந்த இடத்திலும் சிம்புவுக்கு விரல் வித்தை, பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டண்ட் சீன்களில் சிம்புவை காட்ட கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். அதில் மட்டும் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

சமீபத்திய காதல் எந்த லட்சணத்தில் இருக்கிறது? என்கிற உண்மையை புட்டு புட்டு வைக்க ஆசைப்பட்டு அதற்காகவே தயாராகி வந்திருப்பார் போல டைரக்டர் பாண்டிராஜ்.

அவருடைய முந்தைய படங்களில் இருக்கும் யதார்த்த அழகியலோடு வந்திருக்க வேண்டிய படம்! திட்டமிடல் இல்லாததால் சொதப்பலாகி ‘மெகா சீரியல்’ போல ஜவ்வாக இழுக்கப்பட்டு கந்தல் கந்தலாக  கிழிந்து தொங்கலாகி இருக்கிறது.

இது நம்ம ஆளு – ஆள விடுங்கடா சாமீ….