பத்து நாளா சத்தத்தையே காணோம்.. என்ன தான் பிரச்சனை? – மெளனம் கலைத்த விஷால்
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஒருவரி ட்வீட் கூட போடாமல் இருக்க மாட்டார் நடிகர் விஷால். அந்தளவுக்கு எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அவர் கடந்த 10 நாட்களால எந்த சத்தமும் இல்லாமல் சைலண்ட்டாக இருந்தார்.
இதனால் விஷாலுக்கு என்னாச்சு? என்கிற கேள் எழுந்த நிலையில் தலைவலி மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதாகவும், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சை முடிந்து பத்து நாட்களில் சென்னை திரும்புவார் என்றும் செய்திகள் வெளியாயின.
இதற்கிடையே சண்டக்கோழி படப்பிடிப்பின் போது விஷாலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்படி விஷால் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அமைதி காத்து வந்த விஷால் தன் உடல் நலம் குறித்து வெவ்வேறு விதமாக செய்திகள் வருவதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தனது ட்விட்டரில் விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில் ”நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக பல வதந்திகள் வெளியாகின. என் உடல் நலம் ஆரோக்கியத்துடன் தான் உள்ளது என்பதை எனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஒற்றை தலைவலிக்காக சில நாட்கள் ஓய்வு எடுக்கச் சென்றுள்ளேன், ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவேன்” என்று தன்னைப் பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால்.