ஜே பேபி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மகளிர் தினத்தில் வந்துள்ள அம்மா செண்டிமெண்ட் மெட்டிரியல் இந்த ஜே பேபி

அம்மா காணாமல் போகிறார். மகன்கள் தேடுகிறார்கள். கண்டுபுடித்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. இந்தச் சின்னக்கதைக்குள் பெரிய பெரிய எமோஷ்னலையும் எதார்த்தத்தையும் வைத்து நம்மை படத்தோடு ஒன்றச் செய்துள்ளார் இயக்குநர்

அம்மாவாக ஊர்வசி ஒட்டுமொத்த அன்னையினத்தை கண்முன் நிறுத்தி கலங்கடிக்கிறார். 80s இளைஞர்களின் மனதில் பதிந்த ஊர்வசி, இந்த 2K கிட்ஸ் மனங்களிலும் நல்ல நடிகையாக அமர்கிறார். சிறப்பு! மிகச்சிறந்த நடிப்பால் படத்திற்குள் கதையின் நாயகனாக அமர்ந்துள்ளார் ஹீரோ அட்டக்கத்தி தினேஷ். மாறன் நடிப்பும் கச்சிதமாக அமைந்துள்ளது. தினேஷ்& மாறன் கெமிஸ்ட்ரி பக்காவாக அமைந்திருப்பது படத்திற்கு இன்னொரு பாசிட்டிவ்

தேர்ந்த இசையை வழங்கி படம் தரும் எமோஷ்னலை நமக்குள் கடத்தியுள்ளார் இசையமைப்பாளர். இந்த வார்த்தைகள் அப்படியே ஒளிப்பதிவாளருக்கும் பொருந்தும். சிறந்த லைட்டிங் சென்ஸோடு காட்சிகளை அணுகியுள்ளார். எடிட்டர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்

எல்லா மனித உறவுகளும் அன்பைக் கோரிதான் நிற்கிறது. அதன் வடிவங்கள் தான் வேறு வேறாக இருக்கும். அன்பின் முன் நின்று அனைத்தையும் தோற்றாலும் அது தோல்வியாகாது. அன்பை விட்டுட்டு அனைத்தையும் ஜெயித்தாலும் அது வெற்றியாகாது என்பதை சில சமரசங்கள் இருந்தாலும் கலை நேர்த்தியோடு சொல்லியுள்ளது இந்த ஜே பேபி
3/5