”நீங்கெல்லாம் ரொம்ப நாள் சினிமாவுல இருக்கணும்” – ‘அருவி’ படக்குழுவினரை அசர வைத்த ரஜினி!

Get real time updates directly on you device, subscribe now.

‘அருவி’ திரைப்படத்தை பார்த்து விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து ஏற்கனவே பாராட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவையும் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார்.

அவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது. நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்து விட்டேன். எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அருண் பிரபுவிடம் பேசும்போது : அருவி ரொம்ப பிரில்லியண்ட்டான படம் , ரொம்ப எக்சலண்ட்டான படம், ரொம்ப அழுதேன், நிறைய சிரிச்சேன். நான் தனியாக படத்தை பார்க்கும் போது தியேட்டரில் உட்கார்ந்து பார்த்த ஒரு பீல் கிடைச்சுது. Tremendous work. இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும்.

Related Posts
1 of 73

இந்த படத்தை கொடுத்ததற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநரை பாராட்டினார். இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்று கேட்டுள்ளார்? ரஜினிகாந்த்.

அதோடு அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான ‘‘Rolling sir’’ என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார்.

படத்தின் நாயகி அதிதியிடம் ”உங்க நடிப்பு ரொம்ப சூப்பர், எவ்வளவு வெயிட்டைக் குறைச்சி நடிச்சீங்க…” என்றும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

இறுதியில் ”உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்க” என்று கூறி வாழ்த்தி அருவி படக்குழுவினரை அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.