”தனுசு ராசி நேயர்களே” படத்திற்காக நடனமாடிய ஹரீஸ் கல்யாண்

Get real time updates directly on you device, subscribe now.

ப்ரல் 22ஆம் தேதி துவங்கிய ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ”தனுசு ராசி நேயர்களே” படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது படத்தின் கருவை அடிப்படையாக கொண்டு மிகப்பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படமாக்கி வருகிறார்கள்.

இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம். இந்த படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் முடிவெடுக்க விரும்புபவர்.

எனவே, இந்த கருத்துடன் தொடர்புடைய, கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும் ஒரு பாடல் இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். அதற்கு ஏற்றவாறு கலை இயக்குனர் உமேஷ் புதுமையான முறையில் மிக பிரமாண்ட செட் அமைத்தார்.

Related Posts
1 of 135

ஹரீஷ் கல்யாண் ஒரு அற்புதமாக நடனம் ஆடக்கூடியவர், 50 நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து மிகச்சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார்” என்றார்.

முழுநீள பொழுதுபோக்கு படத்தில் ரியா சக்ரவர்த்தி மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். .

பியார் பிரேமா காதலில் ஒரு ‘ரொமாண்டிக்’ ஹீரோவாகவும், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்திலும் நடித்த ஹரீஷ் கல்யாண் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.