ஜாங்கோ- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி என்று சொல்லத் தக்க அளவில் ஜாங்கோ படத்தின் கதை அமைந்திருக்கிறது.

இந்த உலகம் ஒரேநாளில் நின்றுவிடுகிறது. இன்றைய பொழுதே நாளையும் புலர்கிறது. செய்த விசயங்களையே எல்லா மனிதர்களும் திரும்ப திரும்பச் செய்கிறார்கள். ஆனால் அது யாருக்கும் தெரிவதே இல்லை. ஹீரோ சதிஷ்குமாருக்கு மட்டும் அது தெரிகிறது. உலகம் இப்படி நின்று விட்டதற்கான காரணம் விண்ணில் இருந்து விழுந்த ஒரு எரிகல் என தெரிய வருகிறது. மேலும் இந்தப்பிரச்சனையை வைத்து அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் தான் ஜாங்கோ. இந்த லைனை யார் படித்தாலும் இதுவொரு பக்கா மாஸ் மெட்டிரியல் படம் என்றே தோன்றும். இப்படி கதையில் இருக்கும் வீரியம் திரைக்கதையிலும் படமாக்கலிலும் நடிகர்களின் நடிப்பிலும் இருக்கிறதா?

ஒரு படத்தின் திரைக்கதையில் ரசிகர்களை உள்ளிழுக்கும் லாவகம் இருக்க வேண்டும். ஜாங்கோ படத்தில் அது ஏகத்துக்கும் மிஸ்ஸிங். மேலும் ஒரு படத்தை சரியாக சபையேற்ற வேண்டும். அதாவது எழுத்தில் இருப்பதை அப்படியே காட்ட வேண்டும். அதுவும் ஜாங்கோவில் சாத்தியப்படவில்லை. இவை போலவே நடிகர்களின் பங்களிப்பும் படத்தில் மிக முக்கியம். சாதாரண உணர்வுகளை கூட உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் ரசிகனுக்குள் பெரு உணர்வாக கடத்த முடியும். அதன்வழி படத்திற்குள் ரசிகர்களை இழுக்க முடியும். இந்தப்படத்தில் அதைச் செய்ய தவறியிருக்கிறார்கள்.
ஹீரோ சதிஷ்குமார் அழகாக இருக்கிறார். இன்னும் முயற்சியும் பயிற்சியும் அவருக்கு அவசியம். மிருணாளனி நடிப்பில் ஆவ்ரேஜ் ஸ்கோர். கருணாகரன் மட்டுமே ஆறுதல்

படத்தில் cg பல இடங்களில் பல்லைக் காட்டுகிறது. ஒளிப்பதிவிலும் பெரிய தரமில்லை. இசை பாடல்கள் இரண்டும் கூட மிகமிக ஆவ்ரேஜ் ரகம் தான். ஒருசில இடங்களில் வசனம் பராவாயில்லை.
இயக்குநர் மனோ கார்த்திக்கேயன் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். தமிழில் மிக வித்தியாசமான முதல் முயற்சி என்பதற்காக மட்டும் இப்படத்தைப் பார்க்கலாம்..பாராட்டலாம்!
3/5