ஆமாங்க எனக்கு த்ரிஷாவைப் பிடிக்கும்! : ஜெயம் ரவி ரொம்ப ஓப்பனா பேசுறாப்ல…

Get real time updates directly on you device, subscribe now.

jayam-ravi

சுமார் 4 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இதுவரை 26 படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தனது 27-வது தயாரிப்பாக தர இருக்கும் படம் தான் ‘சகலகலா வல்லவன்.’

அப்பாடக்கர் ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, பிரபு, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ஹீரோ, ஹீரோயின்கள், டெக்னீஷியன்கள் மொத்தமும் ஆஜராகியிருந்தார்கள்.

பிரஸ்மீட்டில் ஹீரோ ஜெயம் ரவி பல விஷயங்களை மனம் திறந்து பேசினார்…  ” இந்த ‘சகலகலா வல்லவன்’ என்கிற டைட்டிலுக்கு நான் அருகதையானவனா என்று தெரியாது. ஆனால் அந்த ‘சகலகலா வல்லவன்’ வேறு; இந்த ‘சகலகலா வல்லவன்’ வேறு. ‘அப்பாடக்கர்’ என்றால் அனைத்தும் கற்றவன் என்று அர்த்தம் வந்ததால் இந்த டைட்டிலை வைத்தோம். இந்த லட்சுமி மூவி மேக்கர்ஸுக்கு ‘தாஸ்’ படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.

அடிப்படையில் இந்த இயக்குநர் சுராஜை எனக்குப் பிடிக்கும் அவரது காமெடிக்கு நான் விசிறி. எப்போதும் நான் சீரியாஸாகத்தான் கதை கேட்டேன் அப்படித்தான் என்னைப் பற்றிச் சொல்வார்கள். இந்தக் கதையை சுராஜ் சொன்ன போது சிரித்துக் கொண்டே கேட்டேன்.

படப்பிடிப்பில் த்ரிஷாவிடம் நான் பேசினலே கேமராமேன் செந்தில்குமாருக்குப் பிடிக்காது. உடனே ஷாட் ரெடி என்று அழைப்பார். காரணம் பொறாமையல்ல, அந்த அளவுக்கு வேகமாக எடுத்தார் என்கிறேன்.

Related Posts
1 of 31

சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. தினேஷ் மாஸ்டரின் பையன் ஹரி தான் மாஸ்டர். முதலில் நம்பிக்கை வரவில்லை எடுத்ததும் அசத்தலாக வந்திருக்கிறது.

த்ரிஷாவுடன் இது எனக்கு மூன்றாவது படம். எல்லாரும் கேட்கிறார்கள் த்ரிஷாவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? தொடர்ந்து நடிக்கிறீர்களே? என்று. ஆமாம் த்ரிஷா எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சந்தேகமில்லை. இதிலென்ன தப்பு? த்ரிஷா எனக்கு நல்ல நண்பர். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவு எனக்குப் பிடிக்கும்

த்ரிஷாவும் நானும் பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வருகிறோம். இதில் அவர் தமிழில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடிக்கும் இன்னொரு நடிகை அஞ்சலிக்குக் நல்ல கேரக்டர்தான். அஞ்சலி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை சிபாரிசு செய்தது நான் தான். மற்றவர்கள்
10 படத்தில் கமர்ஷியலாக நடித்தால் ஒரு படத்தில்தான் சோதனை முயற்சியாக நடிப்பார்கள். அஞ்சலி 10 படத்தில் சோதனை முயற்சியாக நடிப்பவர். ஒரு படத்தில் மட்டும்தா ன் கமர்ஷியலாக நடிப்பவர். பிரபு சார்என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி இதில் அவர் என் அப்பாவாக நடித்து இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் சூரி நன்றாக நடித்துள்ளார். அவர் அடுத்த காமெடி சூப்பர் ஸ்டார் ஆகி விடுவார்.

விவேக் சார் ஈகோ பார்க்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’க்குப் பிறகு அவருடன் நடித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். இதை வெறும் காமெடி படம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஒரு நல்ல கதையில் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்பார்கள் போலிருக்கிறது.

இன்றைக்கு திருமண அமைப்பு மீது ஊசலாட்டம் இருக்கிறது. அவ நம்பிக்கை நிலவுகிறது அதற்கு இதில் நல்ல பதில் சொல்லப்பட்டு உள்ளது. நமது பலம் திருமணம், குடும்பம் என்று சொல்லப்பட்டு உள்ளது. நான் முழுப்படமும் காமெடியாக நடித்துள்ள இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்” இவ்வாறு ஜெயம்ரவி பேசினார்.