என் எதிரியை நான் தான் செலெக்ட் பண்ணுவேன் : ஜெயம் ராஜாவுக்கு வந்த கோபம்!
விஜய்யின் ‘வேலாயுதம்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் தனது இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜா. ஸாரி மோகன் ராஜா. (இனிமே இப்படித்தான் கூப்பிடணுமாம்.!)
ஜெயம் ரவியை வைத்து சுமார் 6 தமிழ்ப்படங்களை வரிசையாக ஹிட் கொடுத்த எம்.ராஜாவுக்கு இது ஏழாவது படம்.
”இந்தப் படத்துக்காக நான் நெறைய கேப் விட்டுட்டேன். இடையில ஹிந்தி ரமணாவான கப்பார் படத்தை நான் தான் இயக்க வேண்டிய சூழல் வந்துச்சு, போய் பேசுனா நான் நெனைச்சபடி அந்தப்படத்தை இயக்க விடல. தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன். அந்த படத்துக்காகவே சுமார் 8 மாசம் வீணாப்போச்சு.
விஜய் சாரை வெச்சு ‘வேலாயுதம்’ பண்றப்போ இந்தக்கதை எனக்குத் தோணுச்சு. நாம அடுத்த படம்னு பண்ணினா அது இந்தக் கதையைத் தான் பண்ணனும் முடிவோட இருந்தேன். என் தம்பி ஜெயம்ரவிக்கிட்ட விஷயத்தை சொன்னேன். என்கிட்ட கதையே கேட்காம நடிக்கிற ஒரே இளிச்சவாயன் அவன் தானே? உடனே ஓ.கே சொல்லிட்டான். ஹீரோயின் நயன்தாரா ஐ.பி.எஸ் செலெக்ஷன்ல் தோற்றுப்போன பொண்ணா வர்றாங்க… அதையும் தாண்டி எல்லா வகையிலும் ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்காங்க…
சரி வில்லனா யாரைப் போடலாம்னு யோசிச்சப்ப தான் அரவிந்த் சாமியை போடலாம்னு முடிவு பண்ணி ஜெயம் ரவியை கூட கூட்டிக்கிட்டு அவரை மீட் பண்ணப் போனேன்.
படத்தோட இயக்குநரோட ஹீரோவும் சேர்ந்து வந்து நம்மை கமிட் பண்ண வந்திருக்கார்னா இவங்க ரெண்டு பேருமே நம்மளை ஏமாத்த மாட்டங்கன்னு நம்பினார். மூணு மாசம் வெயிட் பண்ணினோம். கொஞ்சம் வெயிட் கொறைஞ்சு ஆளே பார்க்கிறதுக்கு செம ஸ்மார்ட்டா வந்து நின்னார் அரவிந்த் சாமி சார்.
எங்க காம்பினேஷனில் ‘சம்திங் சம்திங்’ ஹிட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. எவ்ளோ வேணாலும் டைம் எடுத்துக்கங்க.. படம் நல்லா வரணும்னு தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. நெறையவே கஷ்டப்பட்டு நெறைய விஷயங்களை அலசி ஆராய்ஞ்சு இந்தப்படத்தை எடுத்திருக்கேன்.
ஒரு ஹீரோ எந்த வம்பும் செய்யாம தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு இருப்பார். அவனோட வழியில வில்லன் கிராஸ் பண்ணுவார். அப்புறம் தான் ஹூரோவுக்கு வீரம் வரும் . வில்லனை அடிச்சு ஜெயிப்பார் ஹீரோ. இதுதான் வழக்கமான சினிமா ஃபார்முலா.
ஆனா அதையே நான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். அதென்ன வில்லனா வந்து ஹீரோகிட்ட வம்பு இழுத்தாத்தான் அவருக்கு வீரம் வருமா? ஏன் ஒருத்தன் தப்பானவன்னு தெரிஞ்ச உடனே அவனுக்கு வீரம் வர வேண்டாமா? அப்படித்தான் இந்தப்படத்தோட ஹீரோ ஜெயம்ரவி அவருக்கான எதிரியை அவரே பிக்ஸ் பண்றார். இப்படி யோசிப்ப தான் ‘தனி ஒருவன்’ உருவானான். என்றார் சூடு குறையாமல் சொல்கிறார் எம்.ராஜா என்கிற மோகன் ராஜா.