திரைப்பட விநியோகத்திலும் இறங்கிய ‘வேலைக்காரன்’ தயாரிப்பாளர்!

Get real time updates directly on you device, subscribe now.

rd-raja

சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்த 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மீண்டும் அவரையே வைத்து ‘வேலைக்காரன்’ படத்தை தயாரித்து வருகிறது.

விரைவில் ரிலீசாக இருக்கும் இப்பட நிறுவனம் தொடர்ந்து படத்தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் மற்ற ஹீரோக்கள் நடிக்கின்ற மிகச்சிறந்த படங்களையும் விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது.

அதற்காக ’24 PM’ என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

Related Posts
1 of 2

”சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம்.

தயாரிப்பாளர் டில்லி பாபுவின் ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் அருள்நிதி நடிக்கும் ”இரவுக்கு ஆயிரம் கண்கள்”, விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிக்கும் ”ராட்சஸன்” ஆகிய படங்களோடு எங்கள் விநியோக வேலையை ஆரம்பிக்க உள்ளோம்.

சமீபத்தில் ‘மரகத நாணயம்’ என்ற வசூலை குவித்த படத்தை தயாரித்த அவருக்கு இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது. விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம்” என்கிறார் ஆர்.டி. ராஜா.