தோசை அரசனுக்கு எதிரான ஜீவஜோதியின் போர் !
இந்திய சினிமாவில், பல வித்தியாசமான களங்களில் முன்னோடி படங்களான Badhaai Ho, Bareilly Ki Barfi, Talvar மற்றும் Raazi, போன்ற தீவிரமான படைப்புகளை தந்த Junglee Pictures நிறுவனம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் ஒரு அற்புதமான படைப்பை வழங்கவுள்ளது.
Junglee Pictures நிறுவனம் திருமதி ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதையை அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது. தமிழகத்தில் தொடர் உணவக நிறுவனங்களை நிறுவி, கொடி கட்டி பறந்த P.ராஜகோபால் V. மீது தேசமே அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களை சுமத்திய, ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
Junglee Pictures நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர் அவர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற “Raazi” படத்திற்கு பிறகு Junglee Pictures அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.