ஸ்ரீதேவியுடன் ஜோடி போட பாலிவுட் நடிகரை டிக் செய்த மகள் ஜான்வி கபூர்!

Get real time updates directly on you device, subscribe now.

sri-devi

ஜீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க a Mad Films & Third Eye Productions தயாரிப்பில் ஸ்ரீதேவி நடிக்கும், “மாம்” திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts
1 of 3

ரவி உத்யவார் இயக்கி வரும் இப்படத்தில் அக்‌ஷய் கண்ணா, நவாசுதின் சித்திக்கி உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், ‘எ மைடி ஹார்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில், ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த அத்னன் சித்திகி இப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்துள்ளார்.

இதில் அத்னனின் தேர்வுக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதுபற்றி படக்குழு கூறுகையில், “ஜான்விக்கு அத்னனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் நடித்த ‘மைட்டி ஹார்ட்’ படம் ஒரு காரணம். அத்னன் சித்திகியை இந்தப் படத்தில் நடிக்க வைக்க அவரை வர சம்மதிக்க வைத்தனர். பிறகு போனிகபூர் உடனடியாக அத்னனின் குழுவிடம் பேசி அவரைப் ஒப்பந்தம் செய்து விட்டார்” என்றனர்.