ஜிகர்தண்டா டபுள் X- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அதிகார மட்டத்தை கமர்சியல் ரூட்டில் சென்று விமர்சிக்கிறது இந்த டபுஸ் X

ஒரு நடிகனுக்கு ஒரு ரவுடியை கொல்ல வேண்டும் என்பதே லட்சியம். அதன்பின்னால் இருப்பது அரசியல். அந்த நடிகன் ஒரு போலீஸ் மூலமாக எஸ்.ஜே சூர்யாவை அனுப்புகிறார். எஸ்.ஜே சூர்யா அந்த ரவுடியை சினிமா எனும் ஆயுதம் மூலமாக கொல்ல முயற்சிக்கிறார். அவரின் திட்டம் பலித்ததா? அத்திட்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல் என்னது? என்பதே படத்தின் திரைக்கதை

சந்திரமுகி2-ல் நடித்த பாவத்தை இதில் போக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு லாரன்ஸுக்கு. மனிதர் பின்னிவிட்டார். காட்டு மனிதர்களுக்குள் தானும் ஒரு காட்டு உயிராய் மாறி அவர் எமோஷ்னல் காட்டியதெல்லாம் அதிரிபுதிரி மாஸ். எஸ்.ஜே சூர்யா தன் அளவை மீறாமல் அமைதியாக நடித்தே ஸ்கோர் வாங்குகிறார். நாயகி நிமிஷா சஜயன் சின்னச் சின்ன பார்வைகளிலும் செல்ல சண்டைகளிலும் திரையை ஆக்ரமித்துக்கொள்கிறார். ஏனைய கேரக்டர்கள் அனைவருமே முத்திரைப்பதித்துள்ளனர்.

படத்தில் தனி ஆவர்த்தனம் செய்யும் ஹீரோவாக இருக்கிறது திருநாவுக்கரசு கேமரா. ஒவ்வொரு ஆங்கிளும், அதற்கான லைட்டிங் மெனக்கெடலும் வாவ் சொல்ல வைக்கிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் பொளந்து கட்டியுள்ளார். பாடல்களும் நல்ல தரம். க்ளைமாக்ஸில் அவர் அடித்துள்ள அந்த எமோஷ்னல் மேளம் இன்னும் ஒலிக்கிறது

ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவை கொல்லச் செல்லும் லைனே இண்ட்ரெஸ்டிங் ஆக இருக்க, அதைத் தாண்டியும் சில கிளைக்கதைகளை அடுக்கி, அதை மெயின் கதையோடு கனெக்ட் செய்து திரைக்கதையில் அதீத உழைப்பைப் போட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இன்னும் சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். பின்பாதியில் இருந்த ஆழம் முன்பாதியிலும் சேர்ந்திருக்கலாம். சின்னச் சின்ன குறைகள் லாஜிக் மீறல்கள் தெரிந்தாலும் நடிகர் தனுஷ் சொன்னது போல கடைசி 40 நிமிடம் படம் big emotional. தாரளமாக இந்த தீபாவளியை ஜிகிர்தண்டா டபுள் X உடன் கொண்டாடலாம்!
3/5