‘பேய்’ புடிச்ச ப்ரெண்ட்டோட டூரா…? : நல்லாத்தான்யா கௌப்புறாய்ங்க பீதிய…!!!
ரைட் மீடியா வொர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் இணைந்து தயாரித்து வரும் ‘ஜின்.’
‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கலையரசன், ஜானி, ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்த முனீஸ்காந்த், ரமீஸ், காளி வெங்கட், ஹரி, அர்ஜுனன், ப்ரீத்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
எல்லோரையும் போலவே பி.ஈ. முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இயக்குனர் சதீஷ் சந்திரசேகருக்கு வந்த சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டு விட்டு குறும்ப படங்களை எடுத்துத் தள்ள ஆரம்பித்தார். அதில் கைவசம் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார்.
‘ஜின்’ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்க, பட் அதுவும் பேய்ப்படமாத்தான் இருக்கு. இந்த சீஸன் முடியவே முடியாதா? என்கிற கேள்வியை முன் வைத்தோம் சதீஷ் சந்திரசேகரனிடம்!
‘ஜின்’னுன்னா நீங்க நெனைக்கிற மாதிரி ”சரக்கு மேட்டர்” இல்லை. அதுக்கு பேய்ங்கிற ஒரு அர்த்தமும் இருக்கு என்கிற புதிய சுவாரஷ்யத்தின் பின்னணியைச் சொன்னார்.
எனக்கு நெறைய முஸ்லீம் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க பேசுற அரேபி மொழியில பேய் பிடிச்சவங்களை ”டேய் அவன் மேல ‘ஜி’ன்னு வந்துருக்கு”ன்னு தான் சொல்வாங்க. ஸோ அந்த வார்த்தையும் இந்த படத்தோட கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்ததால டைட்டிலா வெச்சுட்டேன். படத்தைப் பார்க்கும் போதுக்கு நீங்களே அதை தெரிஞ்சுக்குவீங்க என்றவர் அடுத்து விவரித்தது தான் திகில் கலந்த ஆச்சரியம்!
வழக்கமான பேய்ப்படங்கள்ல நாலு ப்ரெண்ட்ஸ் சேர்ந்து எங்காவது ஒரு கடற்கரை பங்களாவுக்கு போவாங்க. அங்க போன பின்னாடி தான் அதுல யாராவது ஒருத்தருக்கு பேய் பிடிக்கும்.
ஆனா இந்தப் படத்தில் ஆரம்பத்துல இருந்தே பேய் இருக்கும். ஐந்து ப்ரெண்ட்ஸ் சென்னை, ஈசிஆர்ல இருக்கிற ஒரு ரிசார்ட்டுக்குப் போறாங்க. அங்கிருந்து அப்படியே வால்பாறைக்கு டூர் போறாங்க. அந்த ஐந்து பேர்ல ஒருத்தனுக்கு பேய் பிடிச்சிருக்கும். இந்த விஷயம் தெரியாமலேயே அவங்க கூட்டிக்கிட்டுப் போய் போன எடத்துல என்ன நடந்ததுங்கிறதைத்தான் செம த்ரிலிங்கா சொல்லிருக்கோம் என்றார். எந்த பயமும் இல்லாமல்…
‘பேய்’ புடிச்ச ப்ரெண்ட்டோட டூரா…? : நல்லாத்தான்யா கெளப்புறாய்ங்க பீதிய…!!!