சிம்ரனின் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும் : ‘கரையோரம்’ நிகிஷா பட்டேல்
தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் நிகிஷா பட்டேல் அண்மைக்காலமாக தமிழ்ப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த லிஸ்ட்டில் அவருடைய நடிப்பில் அடுத்து தயாராகி வரும் படம் தான் ‘கரையோரம்’.
இதில் நிகிஷா பட்டேல் ஹீரோயினாக நடிக்க, பிரபல மாஜி நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை ஜே.கே.எஸ் கன்னடா இயக்கியிருக்கிறார். சுஜித் ஷெட்டி இசையமைத்துள்ளார்.
இப்படத்துக்காக சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இந்த மாதம் எடுக்கப்பட்டன.
நான் முதன்முதலாக எஸ்.ஜே.சூர்யா அவர்களை என்னுடைய முதல் திரைப்படமான ‘கொமரம் புலி’யில் சந்தித்தேன். அவருடன் ஒரு பாடலில் நடித்தது நினைவில் உள்ளது.
மேலும் சிம்ரனைப் பற்றி கூறும்போது, எனக்கு சிம்ரனின் நடனமும் அவருடைய நடிப்பு திறமையும் மிகவும் பிடிக்கும். மேலும் வசிஷ்டா போன்ற மூத்த நடிகருடன் நடிப்பதற்கு இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது என்று கூறினார். சாடு கோகிலா, இனியா, தப்லா மணி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.