ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க… – கடைத் திறப்பு விழாவில் ஓட்டமெடுத்த ஜோதிகா!
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்து வரும் ‘நாச்சியார்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்த டீஸரின் முடிவில் ஜோதிகா பேசும் ”தே…. பசங்களா..” என்கிற வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
குறிப்பாக ஜோதிகாவின் ரசிகர்களே அவர் பேசும் இந்த வசனத்தைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். திரையுலகினர் சிலர் கூட பாலாவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அதோடு சர்ச்சை முடியவில்லை. ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விட்டது.
சரி ஏன் ஜோதிகா அப்படி ஒரு கெட்ட வார்த்தையை பேச வேண்டும்? என்பது தான் பலருடைய சந்தேகமாக இருந்தது.
அதற்கு ஜோதிகாவிடமே பதில் கேட்டால் தான் சிறப்பு. அந்த சந்தர்ப்பம் நேற்று அமைந்தது.
சென்னையில் ஒரு கடைத்திறப்பு விழாவுக்கு வந்திருந்த ஜோதிகாவை சூழ்ந்து கொண்ட நிருபர்கள் ‘நாச்சியார்’ படத்தில் பேசிய கெட்ட வார்த்தைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ஜோதிகா “நாச்சியார் படம் ரிலீசானதும் டீசரில் இடம்பெற்ற வசனம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் உரிய விளக்கம் கிடைக்கும். இதற்கு மேல் நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை” என சுருக்கமாக பதில் சொல்லி விட்டு அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாமல் உடனடியாக அந்த இடத்திலிருந்து ஓட்டமெடுத்தார்.