திணறும் டெக்னீஷியன்கள்; டென்ஷனில் ஷங்கர் – ரிலீஸ் சிக்கலில் ‘2 பாயிண்ட் ஓ’

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பல கோடி பொருட்செலவில் தயாராகி வரும் ‘2 பாயிண்ட் ஓ’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளியன்று ரிலீசாகும் என்று படம் ஆரம்பிக்கப்பட்ட போதே சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை.
படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தாமதமாகிக் கொண்டிருப்பதால் அடுத்த ஆண்டு அதாவது 2018 ஜனவரி மாதம் ரிலீசாகும் என்று துபாயில் நடத்தப்பட்ட ஆடியோ பங்ஷனில் படக்குழு அறிவித்தது.
இதனால் எப்படியும் படம் ஜனவரி மாதம் ரிலீசாகி விடும் என்று ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்.
தற்போது அந்த உற்சாகம் குறையும் விதமாக இந்த முறையும் ரிலீஸ் தள்ளிப்போகுமென்று தெரிகிறது.
படத்தில் இடம்பெறும் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் இன்னும் முடியவில்லை. மேலும் ஷங்கரின் ஐடியாக்களை காட்சிகளில் எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள் திணறி வருகிறார்கள். இதனாலேயே பட ரிலீஸ் இன்னும் நான்கைந்து மாதங்கள் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தான் இயக்கிய எந்த ஒரு படமும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாத போது 2 பாயிண்ட் ஓ மட்டும் இப்படி ஒரு சிக்கலில் மாட்டி அதனால் ரிலீசும் தாமதமாவதால் அப்செட்டில் இருக்கிறார் ஷங்கர்.