கா- விமர்சனம்
ஒன் வுமன் கதை
வைல்ட் போட்டோகிராபர் ஆன்ட்ரியா. தன் காட்டுப்பயணத்தை அர்ஜுங் சிங்கோடு மேற்கொள்கிறார். காட்டுக்குள் ஆட்களைப் போட்டுத்தள்ளும் ஒரு சைக்கோ திரிகிறார். ஆன்ட்ரியாவும் மூவரைப் போட்டுத்தள்ளும் சூழல் வருகிறது. இந்தக் கொலைகளுக்கான காரணங்களே படத்தின் திரைக்கதையாக விரிகிறது
தன்னுடைய நல்ல நடிப்பின் மூலம் படத்திற்கு உதவ முயன்றுள்ளார் ஆன்ட்ரியா. ஆனால் அவரது கேரக்டர் வடிவம் அழுத்தமாக இல்லை. அர்ஜுங் சிங் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். சைக்கோ வில்லனும் சைக்கோ தனத்தை காட்டுகிறார்
சுந்தர் பாபு தன் இசையால் படத்தை என்கேஜிங்காக வைத்துள்ளார். அறிவழகன் தன் கேமராவால் படத்தை அழகியலாக்க முயற்சித்துள்ளார். இதர டெக்னிஷியன்களும் நல்ல உழைப்பைப் போட்டுள்ளனர்.
ஒன்லைன் மட்டுமே போதும் என இயக்குநர் நினைத்துவிட்டார் போல. திரைக்கதையில் எந்த மெனக்கெடலும் இல்லை. படத்தை ஆடியன்ஸோடு கனெக்ட் செய்யும் எந்த வித்தையும் திரைக்கதையில் இல்லாததால் கா நம்மோடு கா விடுகிறது
2/5