நித்யானந்தாவை வம்புக்கு இழுக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்?
‘வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாது’ என்கிற வசனத்தைக் கேட்டாலே ஜி.வி பிரகாஷ் ஞாபகம் வந்து விடும். அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படத்தை படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.
இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஜி.வியுடன் புதிய படமொன்றில் இணைந்திருக்கிறார்.
‘காதலை தேடி நித்யா – நந்தா’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான அடுத்த நொடி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. படத்தின் டைட்டில் சாமியார் நித்யானந்தாவை குறிக்கும் என்பது தான் அதற்கு முக்கிய காரணம். இதனால் அவர் சம்பந்தமான கதையாக இருக்குமோ என்றும் ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் இந்த டைட்டிலுக்கும் நித்யானந்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
”படத்தின் நாயகி பெயர் நித்யா நாயகன் பெயர் நந்தா. தன்னுடைய காதல் உண்மை என்பதை நிரூபிக்க காதலன் எந்தளவுக்கு செல்கிறான் என்பதை சொல்லும் கதைதான் இந்தப்படம் அதைத்தாண்டி நீங்கள் யோசிப்பது போல படத்தில் ஒன்றுமில்லை.
வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம், மற்ற விஷயங்களை அடுத்தடுத்து அறிவிப்போம்” என்கிறார்.
படம் வரும்ல, அப்போ பார்ப்போம்…