பிரியா பவானி சங்கருக்காக கேரக்டரை மாற்றிய டைரக்டர்!
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து தற்போது பெரிய திரையில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படங்களில் நடித்தவர் தற்போது அதர்வா ஜோடியாக ‘குருதி ஆட்டம்’ படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் டீச்சராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.
பிரியாவிடம் கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று வெளிப்படையாகக் கேட்டார்.
உண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.