சொந்தக் காசுல ஒரு முயற்சி : மகளுக்காக மல்லுகட்டும் அர்ஜூன்!

Get real time updates directly on you device, subscribe now.

arjun

வாரிசு நடிகர்களை விட நடிகைகளில் பேர் சொல்லும்படி யாருமே சினிமாவில் பிரபலமானதாகத் தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் மட்டுமே இப்போதைக்கு வாரிசு நடிகைகளில் பிஸியாக இருக்கிறார்.

மற்றபடி ராதாவின் இரண்டு மகள்களும், இன்னபிற வாரிசுகளும் இன்று வரை முட்டி மோதிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த லிஸ்ட்டில் வந்தவர் தான் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

Related Posts
1 of 3

முதல் அறிமுகம் விஷாலுடன் ‘பட்டத்து யானை’யாக இருந்தாலும் படம் ஓடாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் எப்படியாவது தனது மகளை முன்னணி நடிகையாக்கி விட வேண்டும் என்று நினைத்த அர்ஜூன் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடத்தில் சொந்தமாக ‘காதலின் பொன் வீதியில்’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

இதில் தன் மகளுக்கு ஜோடியாக சந்தன் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தும் அர்ஜூன் எப்படியாவது படத்தை ஹிட்டாக்கி விட வேண்டும் என்று மெனக்கிட்டு வருகிறாராம்.

மகளே வாழ்க!