காந்தா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

துல்கர் சல்மான் எனும் நடிப்பு அரசனிடமிருந்து வெளிவந்துள்ள ஒரு காஸ்ட்லி வரவு இந்த காந்தா

பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மானை வைத்து பிரபல இயக்குநர் சமுத்திரக்கனி காந்தா எனும் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பில் துல்கர் சமுத்திரக்கனியிடம் சில வசனங்களை மாற்றச் சொல்கிறார். ஆனால் சமுத்திரக்கனி போர்சாக மறுக்கிறார். அதனால் இருவருக்குள்ளும் ஈகோத் தீ யாகத்தீ போல வளர்கிறது. அதன்பின் ஒரு கொலையும் நடக்கிறது. கொலைக்கான விசாரணையை நடத்த ராணா வருகிறார். கதையின் போக்கு மாறுகிறது. என்ட் எதை நோக்கி என்பதே ஸ்லோ ஸ்லோ திரைக்கதை

படத்திற்குள்ளும் ஹீரோவாகவே வரும் படத்தின் ஹீரோ துல்கர் அல்டிமேட் ஆக்டிங்கால் ரசிக்க வைக்கிறார். அவரின் மேனரிசங்கள் எல்லாமே சூப்பர். விட்டுக்கொடுக்காத நடிப்பால் நம்மூர் சமுத்திரக்கனியும் ஈர்க்கிறார். அசத்தலான நடிப்பை வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நாயகி பாக்யஸ்ரீ. ராணாவின் வருகை கதையை வேறு கோணத்தில் நகர்த்துகிறது. அவரும் ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் ஒப்பேற்றியுள்ளார்

டேனி சஞ்சஸ் லோபஸின் ஒளிப்பதிவு படத்தின் தரத்திற்கு 100% கியாரண்டி தருகிறது. ஜானு சுந்தர் தரமான இசையை வழங்கி தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். ஆர்ட் ராமலிங்கத்தின் உழைப்பை அசாத்தியமானது. அந்தக் கால சினிமா செட்-ஐ கண்முன் நிறுத்தியுள்ளார்

ஸ்லோவாக நகர்ந்தாலும் சீரான திரைக்கதை முன்பாதியில் அமைந்தது. ஆனால் பின்பாதியில் படம் ட்ராக் மாறியதால் திரைக்கதையில் பெரிய ஏமாற்றத்தைத் தந்துவிட்டார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ்

காந்தா- நல்ல முயற்சி.. ரொம்ப அயர்ச்சி
2.75/5