மீண்டும் கமலுடன் இணைகிறாராம் லிங்குசாமி! : ஆனா ஒரே ஒரு கண்டிஷன்?
‘கும்கி’, ‘வழக்கு எண் 18/9’ என ரசிகர்களின் புதுவித ரசனைக்கு ஒரு தயாரிப்பாளராகவும் கேரண்டி கொடுத்து வந்தார் இயக்குநர் லிங்குசாமி.
மினிமம் பட்ஜெட்டில் தரமான படங்களைத் தயாரித்து வணிக ரீதியாக வசூலை அள்ளிக் கொண்டிருந்தது அவருடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
என்றைக்கு கமலை வைத்து ‘உத்தம வில்லன்’ படத்தை தயாரித்தார்களோ? அன்றைக்கு விஸ்வரூபமாக ஆரம்பித்தது அடுத்தடுத்த பிரச்சனைகள்?
‘உத்தம வில்லன்’ பட்ஜெட் பெருசு அதே சமயம் படம் வணிக ரீதியாக சரியாகப் போகாததால் பெரும் நஷ்டத்துக்குள்ளானது திருப்பதி பிரதர்ஸ்.
இந்நிலையில் பல தடவை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தள்ளிப்போய் பொங்கலுக்கு ரிலீசான ‘ரஜினி முருகன்’ பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது.
இதனால் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்திருக்கும் லிங்குசாமி மீண்டும் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கத் தயாராகி வருகிறாராம்.
‘உத்தமவில்லன்’ பெருத்த நஷ்டத்தை உண்டாக்கியதால் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லிங்குசாமிக்கு இன்னொரு படம் நடித்து கொடுப்பதாக ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் சமயத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார் கமல்.
அந்த படத்தை தான் இப்போது தயாரித்து இயக்கப் போகிறாராம் லிங்கு சாமி. அதோடு ‘உத்தம வில்லன்’ போல் இல்லாமல் பக்காவான கமர்ஷியல் படமாக இயக்கத் திட்டமிட்டிருக்கும் அவர் கமலிடம் ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் போட்டிருக்கிறார்.
”நீங்கள் ஒரு நடிகராக மட்டும் இந்தப் படத்தில் பங்களிப்பைச் செய்தால் போதும், மற்றபடி வசனம் எழுதுவது, பாடல் பாடுவது போன்றவிபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்பது தான் அந்த கண்டிஷன்.
கரெக்ட்டான கண்டிஷன் தான்!