படப்பிடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு : அதிர்ச்சியில் உறைந்த ‘காவியன்’ படக்குழு!

Get real time updates directly on you device, subscribe now.

shaam

மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த கோர சம்பவம் ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது பைத்தியக்காரன் ஒருவன் 50 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.

ஒரு ஹோட்டலின் 34 ஆவது மாடியில் நின்று கீழே நடந்து கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான். இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.

Related Posts
1 of 144

இதில் அதிர்ச்சியடைய வைக்கும் உண்மை என்னவென்றால் இதே இடத்தில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாம் நடித்து வரும் ‘காவியன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இதே போன்ற சூட் அவுட் சம்பவம் அங்கு படமாக்கப்பட்டது. அதில் ஹாலிவுட் நடிகர் நடித்திருந்தார். இதில் அதிர்ச்சி என்னவெனில் கொலையாளி நின்ற அதே 34 ஆம் தளத்தில் தான் அந்தக் காட்சியின் கேமரா வைக்கப்பட்டு ஒளிப்பதிவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.