ட்விட்டரே கதி : காஜல் அகர்வாலை ஓரங்கட்டும் டைரக்டர்கள்
தமிழில் பாரதிராஜாவால் ‘பொம்மலாட்டம்’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல் அகர்வால்.
சினிமாவில் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் பட எண்ணிக்கையைப் பார்த்தால் அரை கிணற்றைக் கூட தாண்டவில்லை.
அதேபோல நடித்த படங்களிலும் பேர் சொல்லும் படங்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தாலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
தமிழில் விஜய், தனுஷ், கார்த்திக், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவருக்கு ஒரு பக்கம் வயதாகிக் கொண்டே போவதால் அவரை விட இளமையான புதுமுக நடிகைகளைத் தேடி போக ஆரம்பித்து விட்டார்கள் இயக்குநர்கள்.
இன்னொரு பக்கம் அவரே தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறாராம்.
படப்பிடிப்புக்கு வரும் காஜல் அகர்வால் ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்கும் கிடைக்கும் இடைவெளியில் அடுத்த சீனுக்கான டயலாக்குகளை பேசிப்பார்த்து தயாராவதில்லை. மாறாக தனது மொபைலை தூக்கிக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கி விடுவாராம்.
அங்கு ட்விட்டரில் போஸ்ட் போடுவது, லைக் போடுவது, ரீட்வீட் செய்வது போன்ற வெட்டி வேலைகளைத் தான் செவ்வனே செய்வாராம்.
இதனால் கடுப்பாகும் டைரக்டர்கள் இப்படி பொறுப்பில்லாதவருக்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைப்பதை விட, வேறு புதுமுகத்தை வைத்து படமெடுத்தால் நன்றியோடு இருக்குமென்று மாற்று நடிகைகளை தேடிப் போக ஆரம்பித்து விடுகிறார்கள்.
காஜலை வைத்து ஏற்கனவே படமெடுத்த டைரக்டர்கள் மீண்டும் அவர் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.
இப்படி அவரது கேரியர் ஆட்டம் காண ஆரம்பித்திருப்பதால் மார்க்கெட் முழுவதுமாக முக்காடு போடுவதற்கு முன்பே பேர் சொல்லும் விதமாக ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.