‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால்
22 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் `இந்தியன்-2′ படம் தயாராகி வருகிறது.
முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கமல்ஹாசன் டபுள் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா கேரக்டருக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகத்தில் வயதானவர் கேரக்டரில் கமல் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன் தாரா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தற்போது இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.