கேப்டன்- விமர்சனம்

மிருதன், டிக் டிக் டிக், டெடி என கவனிக்கத்தக்க படங்களால் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் சக்தி செளந்தரராஜன். அவர் ஆர்யாவுடன் எடுத்திருக்கும் கேப்டன் அவதாரம் எப்படி இருக்கிறது?
ஒரு மாயம் நிறைந்த வனப்பகுதி. மனிதர்கள் புழங்காத அந்த நிலப்பரப்பில் ஒரு பேக்டரி கட்ட நினைக்கிறது அரசு. அதற்கு தொந்தரவாக ஒரு வினோத மிருகம் இருக்க..அந்தப்பகுதிக்குச் செல்லும் பலபேர் இறக்க..காரணம் என்ன? என்பதே படத்தின் கதை
அளவெடுத்தச் சட்டைபோல் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்யா. துடிப்பும் மிடுக்கும் என உடலளவில் நிச்சயமாக அவர் கேப்டனே தான். சிம்ரன் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹரிஸ் உத்தமன் ஆகியோரின் கேரக்டர்கள் இன்னும் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருந்தால் இன்னும் ஈர்ப்பாக இருந்திருக்கும்.. எல்லாரும் நன்றாகவே நடித்திருந்தாலும் யாரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை ஓரளவு காப்பாற்றி இருக்கின்றன. ஒளிப்பதிவு தான் கேப்டனுக்கு யானை பலத்தை வழங்கியிருக்கிறது. அழகழகான விஷுவல்களால் கண்கள் ஆனந்தம் அடைகின்றன. படத்தில் சிஜி ஷாட்கள் நிறைய இருக்கிறது. But அவற்றில் நிறைய குறைகள் இருக்கிறது. சில இடங்களில் ஓ.கே
இம்மாம் பெரிய பேண்டஸி கலந்த கதையை தமிழுக்கு ஏற்றாப்போல் எழுதியிருக்கும் இயக்குநர் அதை திரைக்கதையாக்கும் வித்தையில் சற்றே தடுமாறியிருக்கிறார். லாஜிக்கை மறக்கடிக்கும் மேஜிக்கும் திரையில் நிகழவில்லை. கேப்டன் இன்னும் ஷார்ப்பாக ஆடியிருக்கலாம்.
2.75/5
#captain #கேப்டன்