‘சங்கத் தமிழன்’ ஆன விஜய் சேதுபதி

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருப்பவர் விஜய் சேதுபதி தான்

‘கடைசி விவசாயி’, ‘சிந்துபாத்’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்கெட்ச் பட இயக்குனர் இயக்கும் பெயரிடப்படாத புதுப்படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ‘சங்கத் தமிழன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த டைட்டில் விஜய் சேதுபதிக்கு மிகவும் பொருத்தமான டைட்டில் என்று பாராட்டி வருகிறார்கள்.

Related Posts
1 of 159

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராக்‌ஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் இந்த படத்தில் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.