காளிதாஸ்2- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பெரும்பாலும் தமிழில் இரண்டாம் பாக படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. இந்த காளிதாஸ்2 எப்படி?

500 குடும்பங்கள் வாழும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வயது குழந்தை காணாமல் போகிறது. விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் பரத் என்ட்ரியாகிறார். அங்கு குடியிருக்கும் அஜய் கார்த்தி மீது பரத் சந்தேகப்படுகிறார். ஆனால் பிரகாஷ்ராஜ் அஜய் கார்த்தியை குற்றவாளி அல்ல என நிரூபிக்கிறார். அதன்பின் பவானி ஸ்ரீ, பரத் கூட்டணி எப்படி குற்றவாளியை நெருங்கினார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை

போலீஸ் இன்ஸ்பெக்டராக பரத் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பவானி ஸ்ரீ நடிப்பிலும் எந்தக்குறையும் தென்படவில்லை. அஜய் கார்த்தி புதுமுகம் என்ற குறை தெரியாதளவில் சமாளித்துள்ளார். அபர்ணதி, பிரகாஷ்ராஜ், நட்ராஜ் உள்பட மற்றும் பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்

சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு படத்தின் கதையோட்டத்திற்கு நன்றாக உதவியுள்ளது. சாம் சி எஸ் இசையில் வழக்கம் போல் பாடல்கள் எடுபடவில்லை. அதேபோல் வழக்கம் போல பின்னணி இசை அசத்தல்

ஒரு கடத்தல் மற்றும் கொலை சம்பவத்தில் தொடங்கும் கதை, பல்வேறு கிளைக்கதைகளோடு தொடர்வது இன்ட்ரெஸ்டிங். திரைக்கதையில் நிறைய வாவ் மொமெண்ட்ஸை கிரியேட் செய்துள்ளார ஆனந்த் அரவிந்தன். இயக்குநர் ஸ்ரீ செந்தில் நேர்த்தியான இயக்கத்தை கையாண்டுள்ளார். நம்மால் யூகிக்க முடியாத திரைக்கதை என்றாலும், படம் மீதான எமோஷ்னல் கனெக்டிங் மிஸ் ஆகிறது. அதனாலே காளிதாஸ் 2 ஆவ்ரேஜ் படமாகவே மனதில் பதிகிறது
2.75/5