‘பட்ஜெட் பத்மநாபன்’ ஆகிறார் கமல்ஹாசன்!

Get real time updates directly on you device, subscribe now.

kamal1

மிழ்சினிமாவில் புதிய முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்திப் பார்ப்பதில் தைரியமாக இறங்குபவர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.

‘விஸ்வரூபம்’ படத்தில் டெக்னிக்கலாக பல புதிய விஷயங்களை புகுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இருந்தாலும் அதற்கான பட்ஜெட் என்பது மிகப்பெரியது. இப்படி புதிய முயற்சிகளுக்கு அதிக விலை கொடுத்து வந்த கமலின் விஸ்வரூபத்தை விட, அவர் முழுப்படத்திலும் வெறும் வேட்டி சட்டையோடு வந்த ‘பாபநாசம்’ மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது.

மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு குட்பை சொல்லும் முடிவை எடுத்திருக்கிறாராம்.

கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டு அதன் வரவுக்காக டென்ஷனோடு காத்திருப்பதற்கு பதிலாக ‘பாபநாசம்’ மாதிரியான படத்துக்கு என்ன பட்ஜெட் தேவையோ அந்தளவுக்கு மட்டும் செலவு செய்து படமெடுக்கலாம் என்பது தான் அவரது எண்ணம்.

சமீபகாலமாக தான் கலந்து கொள்ளும் விழாக்களில் எல்லாம் அவரது பாபநாசம், தனுஷ் தயாரித்த காக்கா முட்டை ஆகிய சின்ன பட்ஜெட் படங்களைப் பற்றி சிலாகித்துப் பேசிவரும் கமல் இனி வரும் சினிமாக்கள் இந்த மாதிரி தான் இருக்கும். அது திரையுலகத்துக்கு நல்லது என்றும் கூறுகிறார்.

தனது உதவியாளர் இயக்கி வரும் ‘தூங்காவனம்’ படத்தையும் பட்ஜெட் படமாகத்தான் எடுத்து வருகிறார் கமல்.