ரசிகர்களை ஏமாற்றிய அஜித் – விஜய்!
அஜித் – விஜய் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்களோ? இரண்டு ஹீரோக்களும் சுதந்திர தினத்தில் தனது அன்புக்குரிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
அஜித் நடித்து வரும் 56-வது படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டிலை நேற்று முன்தினம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்திருந்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரவவும் அவர்கள் டைட்டிலை வரவேற்க ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் சொன்னபடி டைட்டில் விபரத்தை அறிவிக்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதேபோல விஜய்யின் ‘புலி’ பட ட்ரெய்லரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்போவதாக சொன்னார்கள்.
அஜித் ரசிகர்களைப் போலவே விஜய் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்க, திடீரென்று வரும் 20 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று தேதியை மாற்றி விட்டார்கள். சென்சார் ஆகாததால் தான் இந்த தேதி மாற்றம் என்று புலி தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல் தரப்பட்டிருக்கிறது.
சுதந்திர தினத்தை தட புடலாக கொண்டாட நினைத்த அஜித் – விஜய் ரசிகர்கள்