கமலின் ‘பாபநாசம்’ படத்துக்கு ரெட்? : தயாராகும் விநியோகஸ்தர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

 

kamal

ந்ந்தா கெளம்பிட்ட்டாங்கள்ல… என்கிற நிலைமை மீண்டும் வந்திருக்கிறது கமலின் ‘பாபநாசம்’ படத்துக்கு.

சமீபகாலமாக என்ன படம் ரிலீசாகப்போகுது இன்னும் பஞ்சாயத்தைக் காணோம் என்று எதிர்ப்பார்க்கும் அளவுக்கு கமலின் எந்தப் படமும் பிரச்சனைகளை சந்திக்காமல் ரிலீசானதில்லை.

இப்போது அப்படி ஒரு ரிலீஸ் நேர சிக்கல் வரும் ஜூலை 3-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் கமலின் பாபநாசம் படத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கு காரணம் உத்தம வில்லன் படத்தில் ஏற்பட்ட சிக்கல் தான் காரணம் என்கிறார்கள்.

திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு ஜுலை 3 ந் தேதி வரவிருக்கும் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது ‘உத்தம வில்லன்’ படம் ரிலீசான நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனை எழுந்ததல்லவா? அப்போது தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு உதவி செய்யும் பொருட்டு அவருக்கு ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தாராம். அதற்கான அக்ரிமெண்ட் விஷயங்களும் முறையாக நடந்தது. அது நடந்த கையோடு எல்லோரும் மறந்து விட தனது பேனரில் அடுத்த படமாக தூங்காவனம் என்ற படத்தை ஆரம்பித்து போய்க்கொண்டிருக்கிறார் கமல்.

ஆக கமல் நடித்துக் கொடுப்பதாக இருந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் உத்தம வில்லனில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட என்ன செய்வதென்று யோசித்த வினியோகஸ்தர்கள் கிடப்பில் போடப்பட்ட படத்தை கமல் துவங்க உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாபநாசம் படத்தை ரிலீஸ் செய்வதில்லை என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இறுதி முடிவு என்ன என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். அதுவரை பாபநாசம் ரிலீஸ் உறுதியில்லை என்பதே உண்மையாம்.