அப்துல்கலாம் அண்ணனிடம் ஆசி – ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்!

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவில் எப்படி இரு துருவங்களாக ரஜினியும், கமலும் ஒன்றாக கோலோச்சுக்கொண்டிருக்கிறார்களோ கிட்டத்தட்ட இருவரின் அரசியல் பயணமும் அப்படியே ஆகி விட்டது.

ஒரு பக்கம் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி சொல்லியே தனது எண்ட்ரியை தாமதப்படுத்தி வந்த ரஜினி தற்போது முழு நேர அரசியலில் பயணிப்பதற்காக ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி விட்டார்.

கமலோ ரஜினியைப் போல காலம் தாழ்த்தாமல் தனது அரசியல் பயணத்தில் பல மாதங்களுக்கு முன்பே வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.

பத்திரிகையாளர்களை சந்திக்கவே பயமாக இருக்கிறது என்று சொல்கிறார் ரஜினி, ஆனால் மக்களையே பயப்படாமல் சந்திக்கிறார் கமல்.

கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்த ரஜினியிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் அதை இனிமேல் தான் யோசிக்க வேண்டும் என்றார்.

Related Posts
1 of 19

ஆனால் கமல் இப்படியெல்லாம் குழப்பவில்லை. தன் அரசியல் பயணத்தை எப்படியிருக்கும் என்றும் தனது கட்சியின் பெயர், கொள்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து இன்று பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் நடக்கின்ற பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாகச் சொன்னார்.

அதன்படி இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்க்குச் சென்று அங்கிருந்து தனது அரசியல் பயணத்தை துவக்கியிருக்கிறார் கமல். அங்கு அப்துல்கலாமின் அண்ணன் முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றவர், அவருக்கு தன் கையால் ஒரு கடிகாரத்தை கட்டிவிட்டு சந்தோஷப்பட்டார். பின்னர் அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல திட்டமிருந்தார். ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகமும், போலீஸும் அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று அனுமதி மறுத்து விட்டது.

உடனே ராமேஸ்வரம் மீனவர்களை சந்திக்கக் கிளம்பினார். அங்கு அவர்களது பிரச்சனைகளைக் குறித்து கேட்டறிந்தார். எங்களுக்கு பொன்னாடை போர்த்திக் கொள்ளும் பழக்கமில்லை. என் உடலே பொன்னாடை என்று மீனவர்களை கட்டி அணைத்துக் கொண்டார் கமல்.

பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல் ”கலாம் படித்த பள்ளிக்கு நான் செல்லவிருந்ததில் அரசியல் இல்லை. பள்ளிக்கு செல்வதை தடுக்க முடிந்தவர்களால், நான் பாடம் படிப்பதை தடுக்க முடியாது. தடைகளை கடந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்றாலும் அதற்கு நான் தயாராக உள்ளேன். தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன். அரசியலுக்கு வர தொழில் முக்கியமில்லை ; உணர்வும் உத்வேகமும் உள்ள யாரு வேண்டுமானாலும் வரலாம். இன்னிக்கு தாய்மொழி தினம் என்பதால்தான் என் கட்சியை இன்று அறிவிக்க திட்டம். கொள்கையை பற்றி கவலைப்படுவதை விட மக்களுக்கு செய்ய வேண்டியதை யோசிக்கச் சொன்னார் சந்திரபாபு நாயுடு என்றவர் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது பற்றிய கேள்வி ஒன்றுக்கு நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை; என்னுடைய நம்பிக்கை அப்படி” என்று பதிலளித்தார்.

மதுரையில் இன்று புதிய அரசியல் கட்சியைத் துவக்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்த கமல் மதுரை செல்லும் வழியில், பல இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். மாலையில், மதுரை ஒத்தக்கடையில் நடக்கும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்துவதோடு, கட்சியின் கொள்கைகள் குறித்தும் விளக்க உள்ளார். கமலின் அரசியல் பிரவேசம் மதுரையில் த்