போதும் நிறுத்துங்க..அவர் ரஷ்ய மாவோ இல்ல.. சீன மாவோ.. வருத்தம் தெரிவித்த விஜய்!

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ‘தெறி’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “வாழ்க்கையில் கர்வம் கூடாது” என்பதற்காக ஒரு குட்டி கதையை சொன்னார்..
ஒரு நாள் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியான மாவோ, சாலையை கடக்கும் போது ரோட்டோரமாக ஒரு சிறுவன் அவருடைய படங்களை விற்பனை செய்வதைப் பார்த்தார். அந்தச் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த அனைத்து படங்களும் தன்னுடையது மட்டுமே இருப்பதை கண்டு, ‘இனிமேல் என் படத்தை மட்டும் விற்காதே.. மற்ற தலைவர்களின் படங்களையும் விற்பனை செய் ..’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன்.. ‘மத்தவங்க படங்கள் அனைத்தும் வித்திருச்சு.. இதுதான் விக்காதது..’ என்றானாம்.எனவேதான் சொல்றேன்.. வாழ்க்கையில் கர்வப்படவே கூடாது.” என அந்த கதையை விஜய் முடித்தார். ஆனால் மாவோ உண்மையில் சீனாவின் முன்னாள் தலைவர்.
“தலைவா”விற்கு பிறகு கொஞ்ச நாளாக விஜயை ஓட்டுவதற்கு எதுவும் இல்லாமல் இருந்த சமூக வலைதளைதில் உள்ள அஜித் ரசிகர்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் இதுதான் சமயம் என நடிகர் விஜயை கலாய்க்க தொடங்கினர்.
இவை அனைத்தும் விஜய்க்கு தெரியவர, இன்று அவரது பத்திரிகை தொடர்பாளர் மூலம் “தன்னால் தெறி இசை வெளியீட்டு விழாவில் ஒரு பெயர் தவறாக சொல்லப்பட்டது எதேச்சையாக நடந்த ஒன்று தான்.அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என அறிக்கை அனுப்பி உள்ளார்.
எனவே மீம்ஸ் கிரியேட்டர்களே!..நீங்க விஜயை கலாய்த்த வரைக்கும் போதும்.. போங்க.. போய்.. அடுத்த ஆளை கவனிங்க!..