‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!

Get real time updates directly on you device, subscribe now.

உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்
ஷங்கர்,R சரத்குமார்,
சரண்யாபொன்வண்ணன்,
‘ஆடுகளம்’ நரேன்,
உதய் மகேஷ்,
ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் படக்குழு படத்தை விளம்பரபடுத்தும் நோக்கில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. படத்தின் டிரெய்லர் நேற்று (10-02-25) வெளியானது.

அடுத்ததாக இன்று(11-02-25) படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலைஇயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து படத்தின் இசை வெளியிடப்பட்டு, குழு புகைப்படத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.