மீண்டும் ஒரு பிரம்மாண்ட மேடையில் ரஜினி, கமல்

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ் துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர் பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

Related Posts
1 of 111

அதேபோல நடிகர் கமலஹாசனையும் நேரில் சந்தித்து விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவரும் விழாவுக்கு வருவதாக கூறியிருக்கிறார்.