நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்… நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ரசிகர்களை மறக்காத கமல்ஹாசன்!

Get real time updates directly on you device, subscribe now.

kamal1

வ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை ஒரு இலக்கிய விழாவாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடுவார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த ஆண்டு பிறந்தநாளைப் பொறுத்தவரை அப்படியொரு எந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வையும் அவரால் நடத்த முடியவில்லை. ஒருபக்கம் தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தத்தைக் கொடுக்க, இன்னொரு பக்கம் 13 ஆண்டுகளாக தன்னோடு குடும்பம் நடத்திய கெளதமியின் பிரிவும் அவருக்கு பெரும் மன வருத்தத்தை கொடுத்து விட்டது.

வழக்கம் போல பிறந்தநாள் அன்று கமல்ஹாசனுக்கு நேரிலும் போனிலும், சமூக வலைதளங்களிலும் திரையுலக, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருடைய வாழ்த்துகளும் குவிந்தன.

Related Posts
1 of 10

அதோடு கமல் ரசிகர்கள் ட்விட்டரில் #HappyBirthdayKamalhaasan என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி தேசிய அளவில் கொண்டாடினர்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தன்னை வாழ்த்திய அத்தனை பேருக்கும் மறக்காமல் நன்றி தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

”அன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்.” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் கமல்.