ரஜினியை இயக்கப் போகிறாரா சிவா?

Get real time updates directly on you device, subscribe now.

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து படமொன்றை இயக்கத் தயாராகி வந்தார் டைரக்டர் சிவா.

அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் ஆவலோடு அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு காத்திருந்த நிலையில், இன்று நடிகர் ரஜினியை டைரக்டர் சிவா சந்தித்து பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts
1 of 201

ஆமாம், சிவாவை விரும்பி அழைத்த ரஜினி அவரை வீட்டுக்கு வரச்சொல்லி சுமார் ஒரு மணி நேரம் புதுப்படத்துக்காக கதையைப் பற்றி கேட்டதாக சொல்கிறார்கள்.

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் டைரக்டர் சிவாவாக இருக்கலாம் என்று புதிய பதில் கிடைத்திருக்கிறது.

என்றாலும் ரஜினி தரப்பில் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படவில்லை.