‘கங்குவா’வின் புதிய அப்டேட்!

நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ‘கங்குவா’வின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.ஸ்டுடியோ கிரீன், சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினர் இந்தப் படத்தில் நடிகர் பாபி தியோலின் ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் பார்த்தவுடனேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. போஸ்டரில் தலையில் மான் கொம்போடு வித்தியாசமான உடையில் கூட்டத்திற்கு மத்தியில் மிரட்டலான தோற்றத்தில் உள்ளார் பாபி தியோல். பாலிவுட்டில் பல படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய பாபி தியோல் ‘கங்குவா’ படத்திலும் அசத்தலான நடிப்பைக் கொடுக்க உள்ளார். இந்தப் படத்தின் ஒவ்வொரு புரோமோஷனல் மெட்டீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகவே உள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறது.