கண்ணை நம்பாதே- விமர்சனம்
சமூகவிரோதிகளை நாயகன் இனம் கண்டு வேரறுக்கும் சராசரி கதையே கண்ணை நம்பாதே.
பிரசன்னா செய்யும் ஒரு தவறு உதயநிதி மேல் விழுகிறது. அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயலும் உதயநிதி அடுத்தடுத்து சில சிக்கல்களில் மாட்டுகிறார். மேலும் கர்ப்பிணி பெண்களின் கர்ப்பை பையில் சுரக்கும் ஒரு திரவத்தை வைத்து நடக்கும் க்ரைமையும் உதயநிதி கண்டுபிடிக்கிறார் என கதை சற்று விறுவிறு என்றே பயணிக்கிறது. பயணத்தின் முடிவு என்ன என்பதை ட்விஸ்ட் நிறைந்த க்ளைமாக்ஸ்
உடனிருப்பவர்களால் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடும் கேரக்டரில் உதயநிதி ஸ்கோர் செய்கிறார். பிரசன்னா தனது சிறப்பான நடிப்பால் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பிலும் குறையேதுமில்லை. ஆத்மிகா, பூமிகா ஆகியோரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு தேவைப்படுவதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவின் தாக்கம் படத்தில் பேசப்பட வேண்டும் என்பதற்காக பார்த்துப் பார்த்து ஷாட் வைத்துள்ளார் கேமராமேன்
புதுப்புது தகவல்கள், அடுத்து என்ன அடுத்து என்ன என்பதான காட்சி நகர்வுகள் என முன்பாதி படம் சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது. ஆனால் பின்பாதி அப்படியே ஆபோசிட் பாதைக்குச் சென்றுவிடுகிறது. குற்றங்களில் இருக்கும் வலிமை அதற்கான காரணங்களில் இல்லை. இருப்பினும் தரமான மேக்கிங்கால் தப்பிக்கிறது படம்
2.75/5