‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
கௌதம் கார்த்திக்-சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முன்னதாக திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் முடித்துள்ளனர்.படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, பாடல்களை சினேகன் எழுதி இருக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவைக் கையாள, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.