100 மில்லியனை பார்வைகளை எட்டிய குழுவின் அடுத்த வெப் சீரிஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது.

‘கன்னிராசி’ என்பது ஒரு வேடிக்கை நிறைந்த வலைத் தொடராகும், இது திருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தொடர். சேட்டை ஷெரிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அமேசான் பிரைம் ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

இத்தொடர் ஆகஸ்ட் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, நேற்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன், இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.