ஜெ., சமாதி அருகில் சிரிச்சாப்ல செல்ஃபி : நல்லா சமாளிக்கிறீங்க கருணாஸ்…
முந்தாநாள் வரை ஜெ முன்னால் நெடுஞ்சான் கிடையாக விழுந்த அமைச்சர்கள் எல்லாம் நேற்று அவருடைய துக்க நிகழ்வில் எந்தவித சோக உணர்வும் இல்லாமல் சிரித்துக் கொண்டும், சகஜமாக பேசிக்கொண்டும் உட்கார்ந்திருந்தனர்.
இந்தக் காட்சிகளைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைய, நடிகரும் ஜெ., தயவால் எம்.எல்.ஏ ஆனவருமான கருணாஸ் செய்த செயல் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்சியில் அடிப்படை உறுப்பினராக திடீரென்று சேர்ந்து தான் சார்ந்த சாதியின் செல்வாக்கால் எம்.எல்.ஏ பதவியைப் பிடித்த கருணாஸ் நேற்று ஒரு இளைஞருடன் சிரித்தபடியே செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பவர அவருடைய செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இந்த செயலை நான் விரும்பிச் செய்யவில்லை என்று சமாளிக்கும் விதமாக விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் கருணாஸ்.
இதுபற்றி கருணாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
“நேத்திக்கு ராஜாஜி ஹாலிலிருந்து அண்ணா சாலை வழியா எம்.ஜி.ஆர் சமாதிக்கு போய்கிட்டு இருந்த வழியிலே கிட்டதட்ட 100 பேருக்கும் மேலானவங்க கேவலமாக என்னிடம் வந்து செல்ஃபி எடுக்கணும்னு கேட்டாங்க.
அப்போ நான் அவங்ககிட்டே, ‘ஏம்ப்பா, படம் புடிக்கிறதுக்கான இடமா இது..? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?’னு கேட்டேன். அப்படி நான் கேட்டும், அதையும் மீறி என்னோடு போட்டோ எடுக்கணும்னு சில பேர் ஃபாலோ பண்ணி வந்தாங்க.
அப்படி வந்த ஒரு பையன் தான், ‘அண்ணே, நான் ஊர்ல இருந்து வந்துருக்கேன். ஊருக்கு போயிட்டேன்னா அப்புறம் பார்க்க முடியாது, ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாம்’னு கேட்டதனால தான் அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன்.
அது தெரியாம சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்க.
இப்ப இறுதிச்சடங்கு நடக்கும்போது கருணாஸ் எப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்னு கேட்கிறாங்க. இறுதிச் சடங்கிற்கு வந்திருக்கும் போது போட்டோ எடுக்கலாமாங்கிற எண்ணம் ஏன் அவங்களுக்கு வரலை.
நான், எப்போதும் அம்மாவிற்கு உண்மையானவனாக தான் இருப்பேன்.
ஆனா எனக்கு எப்போதும் எதிரிகள் அதிகம். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்தில் என்னை விமர்சித்தால் அவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. இந்த விஷயத்தை பொறுத்தவரை இது தான் என் விளக்கம்” என்கிறார் கருணாஸ்.
பல வருஷமா கூடவே இருந்து கோடிகளை சம்பாதிச்சவங்களோட விசுவாசமே நேத்து அம்பலத்துக்கு வந்துச்சு இதுல இவரு வேற…
போங்க கருணாஸ்…