விஜய்யின் எளிமையை கண்டு வியந்தேன் : சிலிர்க்கும் கீர்த்தி சுரேஷ்
முதல் படமான ‘இது என்ன மாயம்’ படத்தின் படுதோல்வியால் எங்கே முதலே மோசமாகி விடுமோ என்கிற ரேஞ்சுக்கு பயந்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
நல்ல வேளையாக பல மாதங்களாக ரிலீஸ் தேதிகள் இழுத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ ரிலீசான வேகத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று ‘வசூல் முருகனாகி’ அவருடைய இருப்பை உறுதி செய்தது.
பல இயக்குநர்களும் தங்கள் படங்களில் கீர்த்தியை கமிட் செய்ய போட்டி போட, அவரோ விஜய் ஜோடியாக தேடி வந்த ‘விஜய் 60’ படத்தை மட்டும் கமிட் செய்து கொண்டார். இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கே கீர்த்தி தான் சரியான போட்டி!
சரி மூன்றாவது படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
கேட்டதும் வியப்போடு பேசுகிறார் கீர்த்தி சுரேஷ்…
”விஜய்யோடு சேர்ந்து நடிக்கப் போகிறேன் என்று நினைக்கும் போதே மனசுக்குள் பதட்டமாக இருந்தது. படபூஜையில் அவரைப் பார்த்தேன். மிகவும் எளிமையாகவும், அடக்கமாகவும் காட்சி தந்தார்.
எவ்வளவு பெரிய ஹீரோ இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று வியந்தேன். முதல் நாள் படப்பிடிப்பில் அவரோடு சேர்ந்த நடித்தபோது பதட்டம் தொற்றிக் கொண்டது. ஆனால் விஜய் சார் தான் எனக்கு தைரியம் கொடுத்து தொடர்ந்து நடிக்க வைத்தார். அவரோடு நடிப்பது பெருமையாக இருக்கிறது” என்று சிலிர்க்கும் கீர்த்தி இப்போதைக்கு தமிழில் கூடுதலாக சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’ படத்தை மட்டும் கமிட் செய்திருக்கிறார். மற்ற படங்களை ‘விஜய் 60’ ரிலீசானது ஒப்புக்கொள்வாராம்.
எல்லாம் ஒரு ‘கணக்கு’ தான்!