மனசு மாறிய கார்த்தி : தள்ளிப்போகிறது மணிரத்னம் படம்!

‘கொம்பன்’, ‘தோழா’ என அடுத்தடுத்த வெற்றிகளால் உற்சாகமாகியிருக்கிறார் கார்த்தி.
இந்தப் படங்களைத் தொடர்ந்து புதிதாக கமிட் செய்கிற படங்களில் நல்ல கதையம்சம் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘காஸ்மோரா’ படத்திலும் பலவிதமான கெட்டப்புகள், அரை டஜனுக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான செட்டுகள் என புதுமையான படமாகத்தான் தயாராகி வருகிறது.
இந்தப்படம் தற்போது முடிய உள்ள நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கால்ஷூட் கொடுத்திருந்தார் கார்த்தி.
ஆனால் தற்போது மணிரத்னம் படம் இந்த ஆண்டு கடைசிக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டதால் அந்த கேப்பில் இன்னொரு படத்தில் நடித்து விடும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
அவரிடம் கதை சொல்லி விட்டு பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கும் ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் தான் அந்தப் படத்தின் இயக்குநர்.
குறுகிய கால படமாக தயாராகப் போகும் இப்படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள் உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த வாசன் விஷூவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.
நல்ல மாற்றம்!